வாரணாசி தொகுதியில் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

வாரணாசி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியில் மோடி இன்று வேட்புமனு தாக்கல்
x
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியின் எம்பியாக இருந்து வரும் பிரதமர் மோடி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மே 19ம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது. வாரணாசி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, வாரணாசியில் நேற்று 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் மோடி பங்கேற்றார். அவருடன் பாஜக தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். காசி விஸ்வநாதர் கோவிலில் 5 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி உத்தரபிரதேசத்தில் மஹா கும்பமேளா நடந்த போது எந்தவித பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை எனவும், கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் எந்தவொரு வழிபாட்டு தலத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை என்பதே பாஜக ஆட்சியின் சாதனை என தெரிவித்தார். தன்னை எம்பியாக மட்டுமன்றி பிரதமராகவும் ஆக்கியது வாரணாசி எனவும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்