6 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாடி கட்சி :மயின்பூரி தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங் யாதவ்

உத்தர பிரதேச மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
6 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாடி கட்சி :மயின்பூரி தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங் யாதவ்
x
நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில்  6  தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.முதற்கட்டமான இந்த பட்டியலில், கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மயின்பூரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் இருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முலாயம் சிங் யாதவ், 2014 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்த அறிவிப்பில் முலாயம் சிங் குடும்பத்தைச் சேர்ந்த தர்மேந்திர யாதவ், ஆகாஷ் யாதவ் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்