மண்ணில் புதைந்து கிடந்த மண் சிற்பங்கள் கண்டெடுப்பு

கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட மண் சிற்பங்களின் வரலாறு குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணில் புதைந்து கிடந்த மண் சிற்பங்கள் கண்டெடுப்பு
x
கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட மண் சிற்பங்களின் வரலாறு குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பம்பை நதியோரம் அமைந்துள்ள ஆறான்முள பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணரிப்பு காரணமாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஏராளமான மண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. மன்னராட்சி காலத்தை சேர்ந்த இந்த சிற்பங்கள் தயாரிக்கப்பட்ட காலம் மற்றும் அவற்றின் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்