"உற்பத்தி இல்லாததால் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டவில்லை" : இந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவர் மாதவன் தகவல்

ரஃபேல் ஒப்பந்தத்தின்படி நேரடி கொள்முதலாக 36 விமானங்கள் தான் இப்போதைக்கு வாங்கப்படுகிறது.
உற்பத்தி இல்லாததால் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டவில்லை : இந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவர் மாதவன் தகவல்
x
ரஃபேல் ஒப்பந்தத்தின்படி நேரடி கொள்முதலாக 36 விமானங்கள் தான் இப்போதைக்கு வாங்கப்படுகிறது. உற்பத்தி செய்வதற்கான வர்த்தக வாய்ப்பு அதில் இல்லை என்பதால் அந்த ஒப்பந்தத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று ஹிந்துஸ்தான் விமான  நிறுவனத்தின் தலைவர் மாதவன் தெரிவித்தார். ரஃபேல் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்க ஒப்பந்தம் கொடுத்ததால் உள்நாட்டு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடைய நிதி நிலைமை மோசமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், நிறுவனத்தின் நிதி நிலைமை மிக சிறப்பாக கூறிய அவர், கையிருப்பு 12 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாகவும், புதிய ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்து லாபம் அதிகரித்து வருவதாகவும் அப்போது தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்