கேரள அரசை கண்டித்து பாஜக போராட்டம்...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தரிசனத்திற்கு அனுமதித்த கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள அரசை கண்டித்து பாஜக போராட்டம்...
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தரிசனத்திற்கு அனுமதித்த கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கேரள அரசு மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

சேலத்தில் ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதித்த கேரள அரசை கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கேரள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  சபரிமலையில் இருந்து கேரள காவல்துறையினர் உடனே வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்.

கேரள அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்



கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால், போலீசார் மற்றும் இந்து முன்னணியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதேபோல் சிறுமுகை பகுதியில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை முழங்கியபடி, கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனின் புகைப்படத்தை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்