பயிர் கடன்களுக்குகான வட்டி முற்றிலும் தள்ளுபடி - மத்திய அரசு பரிசீலனை

உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிர் கடன்களுக்குகான வட்டி முற்றிலும் தள்ளுபடி - மத்திய அரசு பரிசீலனை
x
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, 7 சதவீத வட்டியில் வழங்கப்படும் பயிர்கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உரிய தேதிக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதமுள்ள 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை புத்தாண்டு பரிசாக மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவசாயிகள் செலுத்தி வரும் பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்