இணையத்தில் வலைவிரிக்கும் நவீன திருடர்கள் : ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ஆபத்தா?

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை பிரச்சினைகளுக்கான சேவை பிரதிநிதி எண்களில் போலியானவை உளவுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
இணையத்தில் வலைவிரிக்கும் நவீன திருடர்கள் : ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ஆபத்தா?
x
பே.டி.எம், மொபி-க்விக், இ-வேலட் போன்ற செயலிகள் மூலம் ஏராளமானோர் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், அவ்வப்போது, பரிவர்த்தனையில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதைக் களைய சம்பந்தப்பட்ட சேவைப் பிரதிநிதிகளை தொடர்புகொள்ள நேரிடுகிறது. அங்குதான் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள் இணையம் மூலம் பணம் திருடுபவர்கள். தமக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து குறிப்பிட்ட நிறுவன சேவைப் பிரதியின் தொலைபேசி இலக்கங்களை வாடிக்கையாளர் இணையத்தில் தேடும்போது, அங்கு ஏராளமான சமூகவிரோதிகள் தங்களை பிரதிநிதிகளாக போலிப் பதிவு செய்து வைத்துள்ளனர். தவறுதலாக அவர்களை தொடர்புகொள்ளும் ஒருவரிடன் கணக்கு எண், கடன் அட்டை எண், ரகசிய குறியீட்டு எண்கள் என அனைத்தையும் பெற்றுவிடுகின்றனர். சிறிது நேரத்தில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடிவிடுவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்