மாணவர்களுக்கான சத்துணவு : கர்நாடகாவில் சர்ச்சை - "பட்டியலிடப்பட்ட காய்கறிகள் இடம்பெறவில்லை"

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து கர்நாடக அரசுக்கும் அக்சயா பாத்திரா என்ற அமைப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் விரிசல், கர்நாடக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
மாணவர்களுக்கான சத்துணவு : கர்நாடகாவில் சர்ச்சை - பட்டியலிடப்பட்ட காய்கறிகள் இடம்பெறவில்லை
x
18 ஆண்டுகளாக கர்நாடக அரசுடன் இணைந்து, அட்சய பாத்திரா என்ற அமைப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில், பூண்டு, 
வெங்காயம் போன்ற பட்டியலிட்டபடி காய்கறிகள் இடம்பெறவில்லை என கர்நாடக அரசு திடீர் குற்றச்சாட்டை முன்வைத்த‌து. இது தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் அக்சயா பாத்திரா அமைப்பிற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப‌ப்பட்டது. இதுதொடர்பாக, மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதே நோக்கம் என்றும் அதனை சரியாக செய்து வருவதாகவும் அக்சயா பாத்ரா அமைப்பு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும்கட்சியினர் தங்கள் மீது உள்ள குற்றங்களை மறைப்பதற்காக 18 ஆண்டுகளாக எந்த குறையும் இன்றி செயல்பட்டுவரும் அக்‌ஷயா பாத்ரா அமைப்பு மீது குற்றம்சாட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

சர்ச்சையை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு :



இது ஒருபுறம் இருக்க அக்‌ஷயா பாத்திரா என்ற பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கு ஒன்றில், தங்களது கொள்கைகளில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என பதிவிடப்பட்டிருந்த‌து. அதிகார பூர்வ டுவிட்டர் கணக்கு இல்லை என்ற போதும், இந்த பதிவு கர்நாடக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்