சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக முதல்வருடன் தேவசம்போர்டு தலைவர் ஆலோசனை

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.பத்மகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக முதல்வருடன் தேவசம்போர்டு தலைவர் ஆலோசனை
x
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.பத்மகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்களுக்கு நிலாக்கல் பகுதியில், கழிவறை வசதி செய்து தரப்படும் என்றும் அதேநேரம் அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுப்பதற்கு, குறைந்த கால இடைவெளியே இருப்பதாகவும் தெரிவித்தார். மகரவிளக்கு பூஜை தொடங்குவதற்குள் பெண்களை அனுமதிக்க முடியுமா என்பது சந்தேகம் என்றும் பத்மகுமார் தெரிவித்துள்ளார். பெண்கள் அதிகளவில் வருவார்களா என்பது சந்தேகம் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்