காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிப்பு

ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சலீம் காப்ரா இன்று அறிவித்தார்.
காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிப்பு
x
ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சலீம் காப்ரா இன்று அறிவித்தார். அதன்படி, நவம்பர் 17, 20, 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் 1, 4, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படும் எனவும் ஒவ்வொருகட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், அந்தந்த தொகுதிகளில் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும் எனவும் சலீம் காப்ரா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்