EXCLUSIVE டெல்லியில் ஆகஸ்ட் 21-ல் ஐ.ஐ.டி.கவுன்சில் கூட்டம் : இளநிலை படிப்புகளை ரத்து செய்ய திட்டம் என தகவல்

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில், இளநிலை பட்டப்படிப்பை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
EXCLUSIVE டெல்லியில் ஆகஸ்ட் 21-ல் ஐ.ஐ.டி.கவுன்சில் கூட்டம் : இளநிலை படிப்புகளை ரத்து செய்ய திட்டம் என தகவல்
x
டெல்லி ஐ.ஐ.டி.யில் வரும் 21 ம் தேதி ஐ.ஐ.டி. கவுன்சில் கூட்டம், அதன் தலைவரும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவ்டேகர் தலைமையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.க்களின் இயக்குனர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.ஐ.டி.க்களில் இளநிலை படிப்புகளை கைவிடும் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.ஐ.டி சேர்க்கைக்காக, நாடு முழுவதும் பெருகி வரும் கோச்சிங் சென்டர்களை கட்டுப்படுத்துவும், முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்துவது குறித்தும் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பத்து பொறியியல் கல்லூரிகளில் இருந்து, தலா 100 மாணவர்கள் வீதம், ஆயிரம் மாணவர்களை ஐ.ஐ.டி.க்கள் தேர்வு செய்து கடைசி் செமஸ்டர் தேர்வுகளை ஐ.ஐ.டி.யில் எழுதும் வகையில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், கூறப்படுகிறது. இளங்கலை படிப்பை ரத்து செய்வதன் மூலம், கணிசமான அளவுக்கு நிதிச் செலவு குறையும் என்பதோடு, ஆராய்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என ஐ.ஐ.டி. இயக்குனர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்