ராமாயண மாதம் கொண்டாட கேரள அரசு முடிவு...

நடப்பாண்டு முதல் ராமாயண மாதம் கொண்டாட கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ராமாயண மாதம் கொண்டாட கேரள அரசு முடிவு...
x
ராமாயண மாதம் கொண்டாட கேரள அரசு முடிவு

ஜூலை 17ம் தேதி, மலையாள காலண்டரின் கடைசி மாதமான கார்கீடகம் மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் ராமாயண கதைகள் கூறப்படுவது வழக்கம். இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. இதனையடுத்து ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, ராமாயண மாதமாக கொண்டாட பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில  அரசு முடிவு செய்துள்ளது. இந்த காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சமஸ்கிருத சங்கம் மூலம் ராமாயண சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமாயண மாதம் கொண்டாடுவதற்கும், இடது சாரிகளின் கட்சி கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. இதனிடையே சொற்பொழிவு நடத்தும் அமைப்புக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, அக்கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்