சரஸ்வதி கோவில் கும்பாபிஷேக விழா - கோபுர கலசங்களை குரங்குகள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு

தெலங்கானா மாநிலம், அதிலாபாத்தில் சரஸ்வதி கோவில் கலசத்தை குரங்குகள் தூக்கி சென்றதால் கும்பாபிஷேகம் பாதிக்கப்பட்டது.
சரஸ்வதி கோவில் கும்பாபிஷேக விழா - கோபுர கலசங்களை குரங்குகள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு
x
தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டம், பாசராவில் பழமையான சரஸ்வதி கோவில் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 
கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அப்போது ராஜ கோபுரத்தில் கலச நீர் ஊற்றுவதற்காக, சிருங்கேரி சாரதா பீடாதிபதி விதுசேகர பாரதி, வந்த போது கலசத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

 இந்நிலையில், சில குரங்குகள் இரவோடு இரவாக கோபுர கலசத்தை எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்