ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு? - ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ்

"காப்பர் தேவை அதிகமாக உள்ளது ","வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை வரும்"
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு? - ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ்
x
ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது  அரசியல் கட்சிக்கோ ஆதரவு தெரிவிக்கவில்லை என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுற்றுப்புற பாதிப்பு தொடர்பான விதிமீறல்களை சட்டப்படி அணுக வேண்டுமே தவிர பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வணிகத்தை மூடுதல் உள்ளிட்ட செயல்கள் தேச நலனுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஜக்கி வாசுதேவ்  கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவுக்கு காப்பர் தேவை அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதனை நாம் சொந்தமாக தயாரிக்கவில்லை என்றால் சீனாவிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டன் சென்ற பாபாராம்தேவ், அங்கு வேதாந்தா குழும தலைவர் அணில் அகர்வாலை சந்தித்துள்ளார். பின்னர் அவர் விடுத்துள்ள சமூக வலைதள பதிவில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சர்வதேச சதி உள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்