ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
x
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலுரை : 



* தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது

* சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது

* மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது

* ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

* கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

* போலீசார் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது

* நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடியில் ரோந்து வாகனம் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது

* ஊர்க்காவல் படைக்கு சலுகைகள் அளிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது

* அனைத்து கோவில்களிலும் தீயணைப்பு கருவிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

* தீயணைப்புத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் 

* காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதற்கூட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது

* ஓய்வுபெற்ற காவலர்களுக்கு நல வாரியம் ஏற்படுத்தப்படும்

* 30 வயதிற்கு மேற்பட்ட காவல்துறையினருக்கு இலவச உடல் பரிசோதனை செய்யப்படும்

* ரூ.110 கோடியில் காவல்துறைக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும்

* கடலோர பாதுகாப்புப் படையின் தலைமையிடம் நாகையிலிருந்து சென்னைக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்