"சின்ன வயசுல இருந்தே ஒரு ஆசை பெரிய ஆசை" - சந்தோஷ கடலில் நெல்லை ரஜினி ரசிகர்கள்

x

ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில் சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ரஜினியை பார்க்க மாலை முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் படப்பிடிப்பு வளாகத்திற்குள் நுழைய முயற்சித்ததால் பவுன்சர்களுக்கு ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் தனது காரின் மேல்புற கண்ணாடியை திறந்து ரசிகர்களுக்கு கையசைத்து சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்