பீஸ்ட் FDFS காட்சியில் பரபரப்பு...தியேட்டரில் திடீரென நொறுங்கிய கண்ணாடி!

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள ஏபிஏ தியேட்டரில் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக புகுந்ததால்...
x
பீஸ்ட் FDFS காட்சியில் பரபரப்பு...தியேட்டரில் திடீரென நொறுங்கிய கண்ணாடி!

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள ஏபிஏ தியேட்டரில் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக புகுந்ததால், தியேட்டரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டருக்கு அதிகாலை 3 மணிக்கே குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்து நடனம் ஆடி பீஸ்ட் படத்தை வரவேற்றனர். பின்னர் டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் ரசிகர்கள் கூட்டமாக சென்றதால், தியேட்டர் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்