ரீ என்ட்ரீயால் நிறைந்த தமிழ் திரையுலகம்...மோகன் முதல் மாளவிகா வரை

தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த சில நடிகர் நடிகையர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் RE-ENTRY கொடுத்துள்ளனர்.
ரீ என்ட்ரீயால் நிறைந்த தமிழ் திரையுலகம்...மோகன் முதல் மாளவிகா வரை
x
தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த சில நடிகர் நடிகையர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் RE-ENTRY கொடுத்துள்ளனர்.

மார்க்கெட் இல்லை.. குடும்ப வாழ்க்கை... என்பதை காரணம் காட்டி திரையுலகை விட்டு ஒதுங்கிய திரைபிரபலங்கள் ஏராளம்..

இதில் வெகுசிலர் மட்டும், ரீ என்ட்ரீ என்ற பெயரில் ரசிகர்களை குஷிப்படுத்துவர். அப்படி சினிமா ரசிகர்களுக்கு இனிய செய்தியாக வந்துள்ளது சில பிரபலங்களின் சினிமா ரீ எண்ட்ரீ...

இதில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளவர் நடிகர் மோகன்...

80களில் வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்டவர்.. பாலு மகேந்திராவை குருவாக பாவித்து நடிப்பால் வெற்றிக்கொடி நாட்டியவர், தனது படங்களில் மைக் பிடித்து பாடும் பாடல் காட்சிகள் மூலமே தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பிரபலமானவர்.

மோகனின் வெற்றிநடைக்கு 90களின் தொடக்கம் தடையை போட, அதன்பிறகு அரிதிலும் அரிதாகவே திரையில் தோன்றினார்.

தமிழில் 2008க்கு பின் ஹரா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரீ கொடுக்கிறார் மோகன். இவருக்கு ஜோடி குஷ்பு என்பது கூடுதல் சிறப்பு...

அடுத்தது நடிகை லைலா...

மௌனம் பேசியதே, பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற படங்களில் அவரது நடிப்பு இன்றும் சிலாகிக்கப்படுபவை.. குறிப்பாக 90களில் பிறந்த ஏராளமானோருக்கு ஆதர்ச நாயகி லைலா...

திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், 16 ஆண்டுகளுக்கு பின்னர் கார்த்தியின் சர்தார் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான மாளவிகாவும், 14 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி இயக்கும் புதிய திரைப்படத்தில்  ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

செண்பகமே செண்பகமே பாடல் மூலம் பிரபலமான பாணுப்பிரியாவின் தங்கை சாந்திப்பிரியாவும், நீண்ட இடைவெளிக்கு பிறகு வெப் தொடர்களில் நடிக்க உள்ளதாக தகவல்....

இப்படி, ரீ எண்ட்ரீக்கு தயாராகியுள்ள இந்த நட்சத்திரங்கள், மீண்டும் தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்பார்களா என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்...

Next Story

மேலும் செய்திகள்