நடிகை கவுதமியின் வங்கி கணக்குகள் முடக்கத்தை நீக்க உத்தரவு

மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்தும் பட்சத்தில், நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் என, வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்தும் பட்சத்தில், நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் என, வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, நடிகை கவுதமி தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016-ம் ஆண்டு 4 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக கூறியுள்ளார். இந்த நிலையில், தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததால் தனது ஆறு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நீதிபதி நிறுத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்