பெண்களைப் பாராட்டி வைரமுத்து வாழ்த்துப்பா!

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
x
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ள அவர், பெண்களைக் கடவுளாக்கி ஒதுக்குவதும் இல்லை, அடிமையாக்கி அடக்குவதும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் சில நேரங்களில் ஆண்களை விடவும் மேலானவள் பெண் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பெண்களின் தியாகங்களை ஆண்கள் கற்றுக் கொள்ளாமலே இருப்பதாகக் குற்றம் சாட்டிய வைரமுத்துபெண்கள் இல்லையேல் ஈர்ப்பும் இல்லை...காப்பும் இல்லை என்று தெரிவித்தார்.அத்துடன், எப்போதும் போல் மகளிர் தினத்திலும் பெண்களை மதிப்பதாக வைரமுத்து மகளிரைப் போற்றியுள்ளார்.


பெண்களைப் பாராட்டி வைரமுத்து வாழ்த்துப்பா! .............................................................................. "கடவுளாக்கி ஒதுக்குவதுமில்லை அடிமையாக்கி அடக்குவதுமில்லை" "சில நேரங்களில் ஆணினும் மேலானவள் மற்றபடி நிகரானவள்" "உன் தியாகத்தை - திண்மையை - கற்றுக்கொள்ளாமலே கழிகிறது ஆண்கூட்டம்" "நீ இல்லையேல் ஈர்ப்புமில்லை; காப்புமில்லை"
"எப்போதும்போல் மகளிர் தினத்திலும் மதிக்கிறேன் பெண்ணே!"

Next Story

மேலும் செய்திகள்