விஜய் கார் இன்சூரன்ஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

நடிகர் விஜயின் கார் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாக இணையத்தில் புயல் வேகத்தில் பரவிய வதந்திக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
x
நடிகர் விஜயின் கார் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாக இணையத்தில் புயல் வேகத்தில் பரவிய வதந்திக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது கவனம் பெற்றது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் ரசிகர்கள் புடை சூழ சிவப்பு வண்ண காரில் வந்து வாக்களித்தார். இந்தக் காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் விஜய்யின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்சூரன்ஸ் காலாவதி ஆகவில்லை என்றும், வரும் மே 28 வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்