புஷ்பா படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது | Pushpa

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா சிறந்த திரைப்படமாக புஷ்பா படம் தேர்வு
x
தாதா சாகேப் பால்வே சர்வதேச திரைப்பட விழா, மும்பையில் நடைபெற்றது. இதில், சிறந்த நடிகருக்கான விருதை, 83 திரைப்படத்தில் நடித்த ரன்வீர் சிங் வென்றார். இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக புஷ்பா, சிறந்த படமாக ஷெர்ஷா ஆகியவை தேர்வு பெற்றன. சிறந்த நடிகைக்கான விருது கிருதி சனோன், சிறந்த இயக்குநருக்கான விருது கென் கோஷ் ஆகியோருக்கு கிடைத்தது. இந்த ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான விருதை சதீஸ் கௌசிக், சிறந்த துணை நடிகைக்காக விருதை லாரா தத்தா ஆகியோர் பெற்றனர். எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகராக ஆயுஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். சிறந்த அறிமுக நடிகருக்கான விருது அஹான் ஷெட்டிக்கு கிடைத்தது.  சிறந்த பின்னணி பாடகராக விஷால் மிஸ்ரா, பின்னணி பாடகியாக கனிகா கபூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்