இல்லை, இல்லை சொல்ல ஒரு கணம் போதும்...! அஜித்துடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் நடிகை

21 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் பாலிவுட் நடிகை தபு இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
வலிமை திரைப்படத்திற்கு அடுத்ததாக எச். வினோத் இயக்கவுள்ள படத்தில் அஜித்துடன் நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2000ம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் மீண்டும் இணைத்து நடிக்கவுள்ளனர். 

சமீப காலமாக அஜித் வித்யா பாலன், ஹியூமா குரேஷியை தொடர்ந்து மீண்டும் பாலிவுட் நடிகையுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   


Next Story

மேலும் செய்திகள்