2020-ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகள் - தென் இந்திய பிரிவில் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியீடு

2020-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
2020-ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகள் - தென் இந்திய பிரிவில் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியீடு
x
திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தென் இந்திய பிரிவில், கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 2019-ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் அட்டகாசமான  நடிப்பை வெளிப்படுத்தியதால், அவர் தேர்வாகி உள்ளார்.

சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வாகி உள்ளார். ராட்சசி படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒத்த செருப்பு படத்தை இயக்கியதற்காக, சிறந்த இயக்குனராக பார்த்திபன் தேர்வாகி உள்ளார்.

சிறந்த இசையமைப்பாளராக, இளம் இசை அமைப்பாளர் அனிருத், தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சிறந்த படத்துக்கான விருதை டூலெட் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

மேலும், பல்துறையில் சிறந்து விளங்கிய நடிகராக அஜித் தேர்வாகி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்