ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.
ஜாக்கிசானின் வாங்கார்ட் பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு
x
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார். முன்னணி ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசானின் வாங்கார்ட் படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவர உள்ளது. இந்த நிலையில் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை முன்னணி தமிழ் நடிகர் மாதவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.    

"ரீமேக் படத்தில் நடிக்கும் நவரச நாயகன் கார்த்திக்" 

நடிகர் கார்த்திக் ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நவரச நாயகன் என்று சினிமா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் ஹிந்தி படமான அனந்தூன் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

காட்டேரி" பட டிரெய்லர் ரிலீஸ்

நடிகர் வைபவ்வின் காட்டேரி பட டிரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர் வைபவ், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிக்கா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து விரைவில் வெளிவர உள்ள திரில்லர் படம் காட்டேரி. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களிடை சூடு பறக்க தொடங்கி உள்ளது.       

நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்பட புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி ரரிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்