தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு - தீபாவளிக்கு திரைக்கு வரும் ஹிட் படங்கள்
பதிவு : நவம்பர் 09, 2020, 01:42 PM
தீபாவளிக்கு புது படங்கள் எதுவும் வெளி வராத நிலையில், ஏற்கனவே ஹிட் அடித்த முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிரிக்க முடியாதது, தீபாவளியும், புதுப்படமும் என சொல்லலாம்... தீபாவளி புது படங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு  அளவே இருக்காது ஆனால், இந்த வருடம் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாவது சந்தேகமே... 

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பின் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதுப்பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் படங்களையும் மீண்டும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் சிவாஜி, கமலின் பாபநாசம், அஜித்தின் விஸ்வாசம், விஜயின் மெர்சல், தனுஷின் அசுரன் உள்ளிட்ட படங்களும் தீபாவளி சிறப்பாக மீண்டும் பெரிய திரைக்கு வர உள்ளது.

இதே போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, துல்கர் சல்மானின் கண்ணும், கண்ணு​ம் கொள்ளையடித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்கள் நாளை முதல் திரையிடப்பட உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

414 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் - 'D43' படத்தின் 3 பாடல் தயார் என அறிவிப்பு

தனுஷ் - ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் மீண்டும் பிரிவு என தகவல்கள் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

76 views

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

16 views

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் 'சேஸிங்' படத்தின் 'நிமிர்ந்து நில்' பாடல் வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் திரைப்படத்தின், "நிமிர்ந்து நில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

22 views

மாஸ்டர் - தியேட்டரில் வெளியிடவே விருப்பம்" - பட தயாரிப்பு நிறுவனம் தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

423 views

"பாவ கதைகள்" - ஒடிடி தளத்தில் வெளியீடு -பிரபல நடிகர்கள் பங்கேற்பு

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" எனும், ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

162 views

ஜூலையில் தொடங்குகிறது பிளாக் பேந்தர்2 படப்பிடிப்பு

சூப்பர் ஹீரோ பட வரிசையில் பெரும் வரவேற்பை பெற்ற, பிளாக் பேந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.