"ரஜினியின் கட்சியில் இணைந்து சமூக சேவை" - அரசியல் நுழைவு குறித்து நடிகர் லாரன்ஸ் கருத்து

நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கினால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அவருடன் இணைந்து சமூக சேவை செய்வேன் என ராகவா லாரன்ஸ் கருத்து கூறியுள்ளார்
ரஜினியின் கட்சியில் இணைந்து சமூக சேவை - அரசியல் நுழைவு குறித்து நடிகர் லாரன்ஸ் கருத்து
x
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் லாரன்ஸ், கொரோனா காலகட்டத்தில் தான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட கட்சியை தனது குரு ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். எனவே, ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான  ரசிகர்களில் தானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூக சேவை செய்வேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்