எஸ்.பி.பி.யின் உயரிய குணமும் உச்சம் தொட்ட பண்பும்

இசையில் மட்டுமல்ல உயரிய குணத்தாலும், உச்சம் தொட்ட தனது பண்பாலும் பலரையும் ஈர்த்துள்ளார்,
எஸ்.பி.பி.யின் உயரிய குணமும் உச்சம் தொட்ட பண்பும்
x
பெரிய ரசிகர் என்றாலும் சரி, சிறிய ரசிகர் என்றாலும் சரி, யார்  ஆட்டோகிராஃப் கேட்டாலும் முகம் சுளிக்காமல் போட்டு கொடுப்பாராம், எஸ்பிபி. இளகிய மனம் கொண்ட எஸ்பிபி, தம்மிடம் உதவி என்று யாரும் கேட்டு வந்தாலும் மறுக்காமல் தம்மால் முடிந்த உதவியை செய்து கொடுப்பாராம். ஒருமுறை திருப்பதி கோயிலில் எஸ்பிபியை பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்த எஸ்பிபி, 'நானும் உன்னை போல ஒரு மனிதன், என் காலில் விழக்கூடாது வேண்டுமென்றால் கட்டிப் பிடித்துக் கொள்' என்று ரசிகரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். உணவு விஷயத்தில் எஸ்பிபிக்கு பிடித்தவை சாம்பார் சாதம் , தயிர் சாதம், சப்பாத்தி.. இவற்றை விரும்பி சாப்பிடுவாராம். வெளியூர் பயணம் என்றால் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் தன்னுடன் தான் சாப்பிட வேண்டும் என்ற அன்பு கட்டளை இடுவாராம், எஸ்பிபி. சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலின் செட் தோசை மற்றும் காபி எஸ்பிபிக்கு மிகவும் பிடித்தவை.. இவற்றை காரில் வைத்து தான் பெரும்பாலும் சாப்பிடுவாராம். வாயில்லா ஜீவன்கள் மீதும் அன்பு மழை பொழிய எஸ்பிபி தவறியதில்லை. ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று சென்னை அருகே அலமாதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மாடுகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் அன்றைய நாள் முழுவதும் நேரத்தை செலவிடுவார்.. இந்த நேரத்தில் கைப்பேசியை பயன்படுத்த மாட்டார் என்று கூறுகின்றனர், எஸ்பிபி  யின் நெருங்கிய வட்டாரங்கள்.

Next Story

மேலும் செய்திகள்