நடன இயக்குனரின் குறும்படத்தை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி

தமிழ்த் திரை உலகில் சக கலைஞர்களுக்கும், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் உதவும் குணம் கொண்டவர் நடிகர் விஜய்சேதுபதி.
நடன இயக்குனரின் குறும்படத்தை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி
x
தமிழ்த் திரை உலகில் சக கலைஞர்களுக்கும், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் உதவும் குணம் கொண்டவர் நடிகர் விஜய்சேதுபதி. இந்நிலையில் நடன இயக்குனர் ராபர்ட் உருவாகியுள்ள "காதல் லாக் டவுன்" என்ற குறும்படத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சூரரைப்போற்று - புதிய அறிவிப்பு - 23ம் தேதி "காட்டுப் பயலே" பாடல்



நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப்போற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யாவின் பிறந்த நாளான வரும் 23-ஆம் தேதி "காட்டு பயலே" என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

யூ-டியூப்பில் 10 கோடி முறை - பார்க்கப்பட்ட ரவுடி பேபி பாடல்



தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூ-டிபில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் யூ-டியூபில் வெளியான அந்த பாடல் பலரையும் கவர்ந்து இழுத்தது. இந்நிலையில் ரவுடி பேபி பாடல் 10 கோடி முறை பார்க்கப்பட்டதாக அதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்  - நடிப்பில் "டேனி" - டிரெய்லர்



வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள டேனி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சந்தான மூர்த்தி இயக்கி உள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்