"நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் உயிரிழப்பு" - நேரில் அஞ்சலி

தனது தீவிர ரசிகர் உயிரிழந்ததால் படத்தின் டிரைலர் வெளியீட்டை ஒத்திவைத்து நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தாருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் உயிரிழப்பு - நேரில் அஞ்சலி
x
ஹைதராபாத்தில் வசிக்கும் நூர் முஹம்மது என்பவர் சிரஞ்சீவி திரையுலகிற்கு வந்ததிலிருந்தே தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். அது மட்டுமல்லாது அவரது குடும்பத்தினருக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளார். சிரஞ்சீவியின் திரைப்படம் வெளி வரும் நாளை, அவர் பெரும் கொண்டாட்டமாக கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  கடந்த ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நூர் முஹம்மது, சனிக்கிழமையன்று உயிரிழந்தார். இதையறிந்த சிரஞ்சீவி, தனது படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு, குடும்பத்தாரோடு சென்று, நூர்முஹம்மது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் ... 

Next Story

மேலும் செய்திகள்