தலை முடியை வெட்டிய நடிகருக்கு ரூ.7 கோடி அபராதம்

மலையாள திரையுலகின் இளம் நடிகருக்கு தன் தலை முடியை வெட்டியதற்காக 7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தலை முடியை வெட்டிய நடிகருக்கு ரூ.7 கோடி அபராதம்
x
மலையாள திரையுலகின் இளம் நடிகருக்கு தன் தலை முடியை வெட்டியதற்காக 7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகின் இளம் நடிகரான ஷேன் நிகம் வெயில் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். நீளமான தலைமுடி கொண்ட இளைஞரின் கதாபாத்திரம் என்பதால் படபிடிப்பு முடியும் வரை தலைமுடியை வெட்ட கூடாது என்றும் இயக்குநர் ஷேன் நிகமுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குர்பானி என்ற படத்திற்காக தன் தலைமுடியை வெட்டிகொண்ட ஷேன் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வெயில் படத்தின் இயக்குநர் சரத் புகார் அளிக்கவே வெயில் மற்றும் குர்பானி திரைப்படங்களை கைவிட தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது.  இதனால் இருபடங்களுக்கும் செலவழித்த தொகையான 7 கோடி ரூபாயை ஷேன் அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்