"குழந்தையை தத்தெடுக்க லாரன்ஸ் உதவ வேண்டும்" : நடிகை காஜல் பசுபதி டுவிட்டர் மூலம் வேண்டுகோள்

குழந்தையைத் தத்தெடுக்க, நடிகர் லாரன்சிடம், நடிகை காஜல் பசுபதி உதவி கோரியுள்ளார்.
குழந்தையை தத்தெடுக்க லாரன்ஸ் உதவ வேண்டும் : நடிகை காஜல் பசுபதி டுவிட்டர் மூலம் வேண்டுகோள்
x
குழந்தையைத் தத்தெடுக்க, நடிகர் லாரன்சிடம், நடிகை காஜல் பசுபதி உதவி கோரியுள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல்பசுபதி, தான் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாகவும், அதற்கு நடிகர் லாரன்ஸ் உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமை அடையவதில்லை என்று கூறியுள்ள அவர், குழந்தையைத் தத்தெடுப்பது தற்போது எளிதானது இல்லை என பதிவிட்டுள்ளார். குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை லாரன்ஸ்க்கு வேண்டுகோள் விடுத்துள்ள காஜல்பசுபதி, குழந்தையின் தேவைகளை தம்மால் பூர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்