அதிகாலை காட்சியில் அதிக வசூல் அள்ளிய திரைபடங்களின் பட்டியல்

விஜய் நடிப்பில், பெரும் சர்ச்சையை கிளப்பிய 'சர்கார்' படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. முன்னதாக அந்தப் படம் வெளியான அதிகாலை காட்சியில் மட்டும், 11 கோடி ரூபாய் வசூலை அள்ளித் தந்தது.
அதிகாலை காட்சியில் அதிக வசூல் அள்ளிய திரைபடங்களின் பட்டியல்
x
'சர்கார்'- அதிகாலை காட்சி - ரூ.11 கோடி வசூல்  

சிறப்புக் காட்சியின் வசூலுக்காகவே, பிகில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு அதிகாலை காட்சி கோரப்படுகிறது. விஜய் நடிப்பில், பெரும் சர்ச்சையை கிளப்பிய 'சர்கார்' படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. முன்னதாக அந்தப் படம் வெளியான அதிகாலை காட்சியில் மட்டும், 11 கோடி ரூபாய் வசூலை அள்ளித் தந்தது. ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடம் இருந்து வசூலை பெரும் நோக்கில் அதிகாலை காட்சி வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

'மெர்சல்' அதிகாலை காட்சி - ரூ.10 கோடி வசூல்

இதேபோல், அதிகாலை காட்சியாக வெளியான விஜயின் 'மெர்சல்' திரைப்படம், 10 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதிகாலை, 4, 5 மணி அளவில் வெளியாகும் சிறப்புக் காட்சிகளின் மூலம், இந்த தொகையை ஈட்டியுள்ளது. ஆனால், மெர்சல் மற்றும் சர்கார் படங்கள் மீது அரசியல் சர்ச்சை எழுந்ததால், இந்த வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது. 

பேட்ட' சிறப்புக் காட்சி - ரூ. 8 கோடி வசூல்

இதேபோல், முன்னணி நட்சத்திரமான ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும் அதிகாலை காட்சி வெளியானது. அதில், 8 கோடி ரூபாய் வசூலை அள்ளித் தந்தது. சிறப்புக் காட்சிகள் மூலம் மட்டும் இந்த வசூலை ஈட்டித்தந்தது. 

'விஸ்வாசம்'- அதிகாலை காட்சி - ரூ. 12 கோடி வசூல்

'பேட்ட' படத்துடன் ஒரே நாளில் திரைக்கு வந்த அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம், 12 கோடி ரூபாய் வசூல் செய்தது. அனைத்து படங்களைவிடவும், எந்த சர்ச்சையும் இல்லாத 'விஸ்வாசம்' திரைப்படம் அதிக வசூலை பெற்றது. அண்மைக்கால வரலாற்றில் நள்ளிரவு ஒரு மணிக்கு திரையிடப்பட்ட ஒரே படம் விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. 



Next Story

மேலும் செய்திகள்