நடிகர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை விவகாரம் : வரும் 15ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் - நீதிமன்றம்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை விவகாரம் : வரும் 15ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் - நீதிமன்றம்
x
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும் மனுத் தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சங்கம், வாக்குகளை எண்ண விடாமல் வழக்கை இழுத்தடிப்பதாக புகார் கூறப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம், அக்டோபர் 15ஆம் தேதிக்கு காலம் அவகாசம் அளித்தும், அன்று நடிகர்கள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணுவது குறித்து முடிவெடுக்கடும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்