களை கட்டிய வெனீஸ் திரைப்பட திருவிழா - திரைப்படங்களை காண குவியும் ஹாலிவுட் பிரபலங்கள்

இத்தாலியின் வெனீஸ் நகரில் துவங்கியுள்ள 76 வது திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் நடித்த செபர்க் படம் திரையிடப்பட்டது.
களை கட்டிய வெனீஸ் திரைப்பட திருவிழா - திரைப்படங்களை காண குவியும் ஹாலிவுட் பிரபலங்கள்
x
கடந்த 28 ஆம் தேதி, துவங்கிய வெனிஸ் திரைப்பட விழாவை ஒட்டி, அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில், தினமும் பல்வேறு மொழிப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இதனை காண, பிரபல ஹாலிவுட் நடிகர்களும், நடிகைகளும், திரையுலக கலைஞர்களும் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமையன்று, திரையிடப்பட்ட செபர்க் திரைப்படத்தை காண, வந்த, பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட், அப்படத்தின் இயக்குநர் பென்டிக்ட் ஆன்ட்ரூஸ், உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்