நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டி- நாசர்

நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிட உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்தார்.
x
நடிகர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ், நடிகர்கள் மோகன், ராஜேஷ், பூச்சி முருகன், நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட 24 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த நாசர், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்