அஜித் நடிக்கிறாரா என்று கேட்ட விஜய் பட நாயகி
பதிவு : மார்ச் 09, 2019, 08:19 PM
விஜயுடன் நெஞ்சினிலே,அரவிந்த் சுவாமியுடன் என் சுவாச காற்றே ஆகிய படங்களில் நடித்த இஷா கோபிகர் தற்போது ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே.14 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சிவகார்த்திகேயனை பார்ப்பதற்கு சிறு வயது ரஜினி போல இருப்பதாக கூறி, அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறாரா என்றும் கேட்டுள்ளார்.இது ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தவிர தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி படங்கள் வருவதில்லை என்றும், தமிழ் சினிமாவில் புதுவிதமான கதைகள் எதுவும் வருவதில்லை என்றும் கூறியுள்ளார்.தான் நடிக்க வந்தபோது எப்படி இருந்ததோ அப்படி தான் தற்போதும் இருப்பதாக கூறியுள்ளார்.இது தமிழ் ரசிகர்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து தற்போது இஷா கோபிகருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

பிற செய்திகள்

'செளகிதார்' வார்த்தையை முன்வைத்து அரசியல்

செளகிதார் என்ற வார்த்தையை முன்வைத்து பாஜக தனது பிரசாரத்தை முன்வைத்துள்ள நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

51 views

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

37 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

474 views

திமுக தேர்தல் அறிக்கை : ராமதாஸ் கிண்டல்

தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக ராமதாஸ் கூறினார்.

27 views

பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

20 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.