நீங்கள் தேடியது "Gaja Relief Funds"

புயல் பாதித்த மக்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
22 Nov 2018 7:51 PM IST

புயல் பாதித்த மக்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

ராம்ராஜ் காட்டன் ரூ. 45 லட்சம் உடைகள் உதவி
22 Nov 2018 7:45 PM IST

ராம்ராஜ் காட்டன் ரூ. 45 லட்சம் உடைகள் உதவி

கஜா புயலில் சிக்கி, மாற்று உடை இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், வேட்டி, சட்டைகள் மற்றும் சேலைகள் 3 லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநரின் காரை வழி மறிக்க மக்கள் முயற்சி
22 Nov 2018 7:34 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநரின் காரை வழி மறிக்க மக்கள் முயற்சி

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பயணம் செய்த காரை மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பொதுமக்கள் வழி மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர்
22 Nov 2018 4:54 PM IST

எழும்பூர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர்

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக 50 வீடுகள் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
22 Nov 2018 4:14 PM IST

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக 50 வீடுகள் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு சுமார் 50 வீடுகளை கட்டி கொடுக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.

கஜா புயல் சேதம் : அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
22 Nov 2018 4:07 PM IST

கஜா புயல் சேதம் : அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் முத்திரை பதித்து அனுப்பி வைப்பு
22 Nov 2018 4:01 PM IST

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் முத்திரை பதித்து அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் : வாகன ஓட்டிகள் தவிப்பு
22 Nov 2018 3:40 PM IST

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் : வாகன ஓட்டிகள் தவிப்பு

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில் அருகே 2 அடிக்கு தேங்கி நிற்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயல் பாதிப்பு : காய்கறி மார்க்கெட்டிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு
22 Nov 2018 3:26 PM IST

கஜா புயல் பாதிப்பு : காய்கறி மார்க்கெட்டிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து 8 லட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கஜா சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கேட்கப்பட்டன? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
22 Nov 2018 3:12 PM IST

"கஜா சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கேட்கப்பட்டன?" - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கேட்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கஜா புயலால் உருக்குலைந்த பள்ளிகளை சீரமைக்க புறப்பட்ட மாணவர் படை...
22 Nov 2018 2:17 PM IST

கஜா புயலால் உருக்குலைந்த பள்ளிகளை சீரமைக்க புறப்பட்ட மாணவர் படை...

கஜா புயலால் நாகையே உருக்குலைந்த நிலையில், அங்குள்ள பள்ளிகளை சீரமைப்பதற்காக, மயிலாடுதுறையில் இருந்து 200 மாணவர்கள் புறப்பட்டுள்ளனர்.

மீண்டும் கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்
22 Nov 2018 12:16 PM IST

மீண்டும் கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விசைபடகுகளின் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.