#BREAKING || நிதி நிறுவன கொள்ளை - மேலும் 3 பேர் கைது

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: மேலும் 3 பேர் கைது
x

நிதி நிறுவன கொள்ளை - மேலும் 3 பேர் கைது

வடபழனி நிதி நிறுவன கொள்ளையில் மேலும் மூன்று பேர் கைது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

வடபழனி ஓசோன் கேப்பிட்டல் நிதி நிறுவனத்தில் ஏழு பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தி முனையில் 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்

இந்த கொள்ளையர்களில் ஒருவரான ரியாஸ் பாஷா என்பவரை நிதி நிறுவன ஊழியர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

நேற்று கிஷோர் கரண் தமிழ்செல்வன் என வடபழனி நிதி நிறுவன கொள்ளையில் சம்பந்தப்பட்ட இருவர் திருவள்ளுவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகினர்

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்