🔴LIVE : அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள் செலுத்தும் நிகழ்ச்சி

x
  • அரசுப்பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட 150 சிறிய ரக செயற்கைக்கோள்கள் தற்போது மாமல்லபுரத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு வருகிறது அதன் நேரடி காட்சிகள்...
  • 2.5 கோடி செலவில் அரசு பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் தயார் செய்யப்பட்ட 150 சிறிய செயற்கைக்கோள்.
  • 1 கிலோ விற்கும் எடை குறைவான செயற்கைக்கோள்கள் அரசு பள்ளி மாணவர்களால் வடிவமைப்பு.
  • 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் சவுண்ட் ராக்கெட் மூலமாக வானுக்கு செலுத்தி செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளன..
  • காற்றில் உள்ள மாசு அளவு, காற்றின் தரம், வெப்பநிலை, ஆக்சிஜன் மற்றும் கதிர்வீச்சின் அளவுகளின் தகவல்களை சிறிய ரக செயற்கைகோள்கள் சேகரிக்கும் வகையில் வடிவமைப்பு.
  • செயற்கை கோள் ஏவும் நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ அதிகாரிகள், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்ப்பு
  • இந்தியா முழுவதும் 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் 5000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன
  • பயிற்சியின் முடிவில் 150 செயற்கைகோள்கள் தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன
  • அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்புகளின் உதவியுடன் அரசு பள்ளி மாணவர்கள் செயற்கைகோளை உருவாக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்