காவல் துறையினர் தபால் நீட்டிப்பு | TN Police | Elections 2024 | Postal Vote

x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கான புதிர் போட்டி நடைபெற்றது... இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை சென்னையில் மட்டும் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 9 கோடியே 60 லட்ச ரூபாய் பணம், 6 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

இதைத்தவிர காவல்துறையினர் 61 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 இடங்களில் இன்று அல்லது நாளை அனைத்து பணிகளும் முடிவடையும் என்றும், காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்... கடந்த 2 நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மத்திய, வட மற்றும் தென் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்