எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை...? பல கோடிகளை கொட்டிய நிறுவனங்கள்... ஷாக் தகவல்கள்

x

தேர்தல் பத்திர விவகாரத்தில், பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ள தரவுகளை, தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரத்தை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், எந்த நிறுவனம் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு ரூபாய் நன்கொடையாக அளித்து போன்ற விபரங்கள் இடம் பெறவில்லை. ஆனால், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கிய முதன்மை 30 நிறுவனங்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அதில், மிக அதிகமாக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான Future Gaming and Hotel services நிறுவனம், ஆயிரத்து 208 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வழங்கி உள்ளது. 2-ஆவது இடத்தில், Mega Engineering and infrastructure limited நிறுவனம் 821 கோடி ரூபாயும், அதைத் தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் 375.65 கோடி ரூபாயும் நன்கொடையாக கொடுத்துள்ளன. ஏறத்தாழ 30 முன்னணி நிறுவனங்கள், சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்