தமிழகத்தில் தொடங்கியது தபால் ஓட்டு பெறும் பணி

x

#postalvoting #2024elections

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தபால் ஓட்டு பெறும் பணி வரும் 8ஆம்தேதி தொடங்குகிறது. சென்னையில், மாற்றுத்திறனாளிகள் 366 பேரும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4,176 பேரும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே போன்று காஞ்சிபுரத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,039 பேர், 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1,651 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் வரும் திங்கட் கிழமை முதல், தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வீட்டிற்கே சென்று தபால் வாக்குகளை பெற உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்