வேலை உத்தரவாத சட்டம் டூ இலவச மருந்துகள்...காங்கிரஸ் கொடுத்த அதிமுக்கிய வாக்குறுதிகள்...

x

பெங்களூருவில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, ஷ்ராமிக் நியாய உத்திரவாதம், ஹிசேதாரி உத்திரவாதம் என்ற பெயர்களில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அனைத்து மக்களுக்கும் இலவச மருந்துகள், சிகிச்சை உள்ளிட்ட பொது சுகாதார சட்டத்திற்கு உத்தரவாதம் அளித்தார். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 400 ரூபாயாக இருக்கும் எனவும், வேலை உத்தரவாத சட்டத்தை கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு அளிக்கப்படும் என்றார். இதேபோல ஹிசேதாரி உத்தரவாதத்தின் கீழ், சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்