பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ், தினகரன்? - சூசகமாக அண்ணாமலை சொன்ன பதில்

x

நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை தருகிறார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, ஓ.பி.எஸ்.-தினகரன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நல்ல விஷயத்துக்காக ஒரே நேர்கோட்டில் வருவதாகவும், கூட்டணிக்கு ஒரு காந்தம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்