எதிர்பார்த்த திமுக.. அதிர்ச்சி கொடுத்த விசிக

x

தொகுதி பங்கீடு குறித்து திமுக - விசிக இடையே இன்று நடைபெற இருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக இன்று பேச்சுவார்த்தை ஈடுபட்டது. இதன்பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விசிகவினர் வராத நிலையில், சுமார் 12 மணியளவில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டனர். இதனால் திமுக-விசிக பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்திருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்