Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2024) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2024) | Morning Headlines | Thanthi TV
x
  • தொடர் மழையால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது... அணையில் இருந்து விநாடிக்கு 3100 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...
  • தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை... தாமிரபரணி கரையோர பகுதி மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்...
  • அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலி... முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுரை...
  • கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு... இடுக்கி, கொல்லம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை...
  • தமிழக அரசின் சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு... ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வழங்க உத்தரவு...
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த, மேலும் 2 லட்சம் பேருக்கு இந்த மாதம் முதல் 1000 ரூபாய் பணம்... வருகிற 10ஆம் தேதியன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தகவல்...
  • இடர் மிகுந்த சூழலிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாயை மாநில அரசு வழங்கும் நிலையில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன...? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி....
  • டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு... வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்