முதல்முறையாக செய்தி வாசித்த மன்னரும், ராணியும் - வியப்பில் மலேசிய மக்கள்

x

பல்வேறு இனத்தவர்கள் வசிக்கும் மலேசியாவில், மலாயர்கள், மலேசிய இந்தியர்கள், மலேசிய சீனர்களின் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் அந்நாட்டு மன்னர் அப்துல்லா Abdullah, ராணி அசீசா அமீனா Azizah Aminah ஆகியோர் தொலைக்காட்சியில் செய்திவாசித்து, மக்களிடையே தேச ஒற்றுமையை வலியுறுத்தினர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறைசாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த செய்தியை மன்னரும், ராணியும் மூன்று செய்தி தொகுப்புகளில் வாசித்தனர்.

அதில், இந்தியர்களின் பாரம்பரிய உணவு வகையான ரொட்டி சென்னா, மலாயர்களின் நாசிலெமாக், சீனர்களின் கொய்த்தியாவ் கோரிங் ஆகிய உணவு வகைகளை அனைத்து மக்களும் விரும்பி உண்பது போல், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

மலேசியாவின் வளர்ச்சிக்கு அனைத்து இனத்தவரும் ஆற்றிய பங்களிப்பு போற்றுதலுக்கு உரியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்