யுத்த பூமியில் மலர்ந்த காதல்! நாட்டுக்காக கைகளை இழந்த காதலன்...அன்பை ஆயுதமாக்கிய காதலி!

x

உக்ரைன் போர் கொடூரங்களை கடந்த ஒரு காதல் காவியம் குறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

காதல் ஜோடி நன்றாக இருக்கும் புகைப்படக்காட்சிகளை மாறி, மாறி ஓட விடவும்'

உக்ரைனில் மரங்கள்... மலைகளை கடந்து கொட்டு பனியில் மனங்கள் இணைந்து காதல் வளர்த்தது ஆண்டரி - அலினா ஸ்மோலென்ஸ்கி ஜோடி...

உக்ரைனை சேர்ந்த இவர்களது காதலை இணைத்தது நண்பர்களை இணைத்த பேஸ்புக்தான்... கீவ் நகரில் கேளிக்கை நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இருவரும், முதல் பார்வையிலே மனதை பறிகொடுத்திருக்கிறார்கள்...

காதலி அலினாவை தேடி, பேஸ்புக்கில் பார்த்த ஆண்டரி, சாட் செய்ய தொடங்கி இருக்கிறார். இரவுகளை கடந்த அவர்களது பேச்சு இரு மனங்களையும் இணையும் காதலாக்கியது. எதிர்காலம் நோக்கிய சிந்தனையுடன் தங்கள் வாழ்க்கை பயணத்தையும் தொடங்கினர். அப்போதுதான் அவர்களது வாழ்க்கையில் இடியாக விழுந்தது ரஷ்ய படையெடுப்பு...

2022 பிப்ரவரி ரஷ்ய படைகள் வீசிய குண்டுகள் உக்ரைனை உருகுலைக்க, நாட்டை காக்க இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என கேட்டது உக்ரைன் அரசு.... அதற்கு செவிசாய்க்கிறார் ஆண்டரி... ''

நாட்டை காக்க அவர் ராணுவ பாதையில் சென்றதை அவரது காதலி அலினாவும் ஆமோதிக்க ராணுவ சேவையாற்றும் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளார்.. அப்போது அவர் அறிந்திருக்க மாட்டார் இந்த கைகள் இனி நமக்கு இருக்காது என்பதை... தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய ஆண்டரிக்கு ராணுவத்தில் ட்ரோன்களை இயக்கும் பணி வழங்கப்பட்டிருக்கிறது. பணியை தொடங்கிய புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார் ஆண்டரி..

எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என அலினா நாட்களை நகர்த்த ஒரு அபாய செய்தியை அவரை எட்டியது... ஆம் ஆண்டரி ட்ரோன் வெடிப்பில் சிக்கி கைகளை இழந்துவிட்டார் என்பதுதான் அந்த துயரச் செய்தி... ட்ரோன் இயக்கிய போது கண் முன்பாகவே வெடித்து சிதறியதில் ஆண்டரியின் கைகள், முகம் சிதைந்தது..

தகவலை கேட்டு கண்ணீருடன் கீவிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு ஓடிய அலினா... அன்பு காதல் கணவன் குத்துயிரும், குலையிருமாய் கிடப்பதை கண்டு வேதனையில் கதறியுள்ளார். வேதனையில் உறைந்தவர் அங்கிருந்து செல்லாது... காதலனை காப்பாற்ற தனது அன்பை ஆயுதமாக்கினார். சுய நினைவு திரும்பிய ஆண்டரி எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என வடித்த கண்ணீரை துடைத்து, அவரது கைக்கு கையாகும், பார்வை அளிக்கும் கண்ணாகவும் மாறினார் அலினா...

ஊனம் என்ற தீயிலிருந்து ஆண்டரியை அன்பில் அரவணைத்து காக்க தொடங்கினார். நாட்கள் செல்ல.. செல்ல மருந்துகளில் ஆண்டரியின் உடல் காயங்கள் ஆற.. அலினாவின் அன்பில் அவரது மன காயம் ஆறியது.

இன்று காதல் கணவனுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்து, எல்லாவுமாக உடன் இருக்கிறார் அலினா... என்றும் உனக்கு நான்... எனக்கு நீ என இருவரும் ஆன்மாவில் இணைந்து, இது காதல் என்கிறார்கள்... போர் கொடூரங்களை கடந்த அவர்களது காதல் காவியத்தை காணும் பலரும்.. அன்பில் இலக்கணம் இதுவே என நெகிழ்ந்து பாராட்டுகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்