திடீர் நிபந்தனை விதித்த ஹமாஸ் - நெருக்கடியில் சிக்கிய இஸ்ரேல்..! நெதன்யாஹூவின் முடிவு என்ன..?

x

5 நாட்கள் காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட்டால் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயார் என ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்கஸ்ஸாம் அணியின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா தெரிவித்துள்ளார்... மேலும், அந்தப் போர் நிறுத்தமானது, மனிதாபிமான உதவிகள், நிவாரண பொருட்கள் காசா முழுமைக்கும் சென்றடைதலை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்... இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 240 பேர் ஹமாசால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்... இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 11 ஆயிரத்து 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... அவர்களில் 4 ஆயிரத்து 630 பேர் குழந்தைகள் மற்றும் 3 ஆயிரத்து 130 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்